உள்ளடக்கத்துக்குச் செல்

கூகை ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகை ஆந்தை
இங்கிலாந்தின் பிரித்தானிய வனவிலங்கு மையத்தில் கூகை ஆந்தை
கூகை ஆந்தையின் அலறல் வேல்சின் கார்டிகன்ஷயரில் பதிவு செய்யப்பட்டது
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைடோனிடே
பேரினம்:
டைடோ
இனம்:
T. alba
இருசொற் பெயரீடு
Tyto alba
(இசுகோபோலி, 1769)
துணையினம்

பல, பார்க்கவும்உரை

உலக பரம்பல் பச்சை நிறத்தில்
வேறு பெயர்கள்

இசுட்ரிசு ஆல்பா இசுகோபோலி, 1769
இசுட்ரிசு பிராடின்கோலா போனபர்தி, 1838
டைட்டோ டெலிகாட்டுலா கொளட், 1837

களஞ்சிய ஆந்தை (Barn owl) (டைட்டோ ஆல்பா) என்பது உலகில் மிகவும் பரவலாக காணப்படும் ஆந்தை இனமாகும். இது துருவ மற்றும் பாலைவனப் பகுதிகளைத் தவிர அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. இமயமலைக்கு வடக்கே ஆசியாவிலும், பெரும்பாலான இந்தோனேசியா மற்றும் சில பசிபிக் தீவுகளில் காணப்படுகிறது. இது பொதுவாக கூகை ஆந்தை என்றும் அழைக்கப்படுகிறது.[2]

உடலமைப்பு

[தொகு]

36 செ.மீ. - வட்ட வடிவமான இதன் முகத்தினைச் சுற்றி விறைத்து நிற்கும் பலவகை நிறங்கள் கொண்ட தூவிகள் இருக்கும். சாம்பல் நிற உடலில் கருப்பு காணலாம். மார்பும் வயிறும் ஆழ்ந்த பழுப்புப் புள்ளிகளோடு பட்டு நிறத்தை ஒத்த வெண்மையாக இருக்கும்.

கூகை ஆந்தையின் அழகிய தோற்றம்

காணப்படும் பகுதிகள், உணவு

[தொகு]

தமிழகம் எங்கும், பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், புழக்கத்தில் இல்லாத கிணறு ஆகியவற்றில் பகலில் பதுங்கி இருந்து தாக்கும் ஆற்றல் இதன் கண்களுக்கு இல்லாததால் காக்கை முதலிய பறவைகள் தாக்கும்போது தன்னைக் காத்துக் கொள்ள இயலாததாக உள்ளது. சிட்டுக்குருவி, எலி, சுண்டெலி, ஆகியவற்றை உணவாகக்கொள்ளும். இது உழவர்களுக்கு உற்ற தோழன் என்ற பெருமையைப் பெறுகின்றது. பறக்கும்போது இறக்கைகளிலிருந்து ஒலி எழுவதில்லை. இதனால் எதிர்பாராது இரவில் இதனை எதிர்ப்படுவோர் அஞ்சி இதனை சாக்குருவி என அழைக்கின்றனர். பலவகைக் குரல்களில் உரக்கக் கத்தும். இதன் குரல் கரகரப்பாக திட்டுவதுபோல அமையும்.

இனப்பெருக்கம்

[தொகு]

ஆண்டு முழுவதும் மரங்களின் பொந்துகளிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் 4 முதல் 7 முட்டைகள் இடும். தோற்றத்தில் இதனை ஒத்த புல்கூகை Grass Owl, T.capensis மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் புல் உயரமாக வளர்ந்திருக்கும் காடுகளில் காணப்படுகிறது. தரையில் புல்லிடையே பகலில் பதுங்கியிருந்த இரவில் எலி முதலியவற்றை வேட்டையாடும் மரங்களை நாடிச்செல்லும் பழக்கம் இல்லாதது.[3]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2012). "Tyto alba". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2012: e.T22688504A38682217. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T22688504A38682217.en. http://www.iucnredlist.org/details/22688504/0. பார்த்த நாள்: 11 August 2016. 
  2. Bruce (1999) pp. 34–75
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:75

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகை_ஆந்தை&oldid=3929143" இலிருந்து மீள்விக்கப்பட்டது